Wednesday, December 19, 2018

களிமண் சிற்பம் பயிற்சிப் பட்டறை

களிமண் சிற்பம் பயிற்சிப் பட்டறை

அனலி குளிர்கால பயிற்சி வகுப்புகளாக களிமண் சிற்பம் பயிற்சி பட்டறை நடத்துகிறது. இவ்வருடம் (2018) டிசம்பர் 28 முதல் டிசம்பர் 30 வரை நடைபெறும் இப்பயிற்சிப் பட்டறையில் வயது வேறுபாடு இன்றி யார் வேண்டும் என்றாலும் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கு தேவைப்படும் களிமண் அனலி வழங்கும். பெயர் பதிவுக்கும் மேலும் தகவல்களுக்கும் அழைப்பிதழில் பதிந்திருக்கும் பேசி எண்களில் தொடர்பு கொள்க.

மாயம் செய்யும் விரல்களைப் பழக்குங்கள். வாழ்த்துகள்.




அனலியின் கல்வி மேலாண்மை

அனலி ஒரு பகுதிநேர பள்ளி. முழுக்க முழுக்க தன்னார்வ சேவை மனதுடனே அனலி இயங்குகிறது. கலை இலக்கிய இறையாண்மையை பேணவும் அவற்றின் ஆற்றலை தலைமுறையினருக்கு உணரச் செய்தலும் கலை இலக்கிய மனப்பாங்கை பரவலாக்குவதுமே இப்பள்ளியின் நோக்கம்.

மாணவ தகுதி
  • ஆர்வமுள்ள எவரும் எந்த வயதினராயினும் அனலியில் இணைந்து படிக்கலாம். 
  • அடிப்படை கல்வியறிவு போதுமானது.  

வகுப்பு நேரம் 

  • தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை
  • சனி, ஞாயிறு, அரசு விடுமுறை போன்ற நாட்களில் தேவையினடிப்படையில் வகுப்புகள் நடைபெறும்

கல்விமுறை
  • தொடர் வகுப்புகளாகவும் பயிற்சி பட்டறைகளாகவும் பாடங்கள் நடத்தப்படும்.
  • செயல்முறை கல்வி முறையில் பயிற்றுவிக்கப்படும்.
ஆசான்கள்
  • கலை இலக்கியத் தளங்களில் காத்திரமாக பங்காற்றும் பணியாற்றும் கலைஞர்களும் இலக்கிய ஆளுமைகளும் அனலியின் ஆசான்களாக பாடம் பயிற்றுவிப்பர்.
  • பள்ளி கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தங்கள் ஓய்வு நேரங்களில் அனலியின் ஆசான்களாக பாடம் பயிற்றுவிப்பர்.
  • வெளிமாநில வெளிநாட்டு கலை இலக்கிய மாணவர்கள் ஆளுமைகள் போன்றோர் வருகைதரும்போது அவர்களும் அனலியின் ஆசான்களாக பாடம் பயிற்றுவிப்பர்.
சான்றிதழ்
  • அனலியின் சான்றிதழ் வழங்கப்படும்.
  • சில குறிப்பிட்ட பாடங்களுக்கு பல்கலைக்கழகங்களின் தொலைதூர படிப்பில் இணைத்து அவற்றின் சான்றிதழ் பெற்றுதர வழிகாட்டப்படும்.
எதிர்கால வழிகாட்டுதல்

  • அனலியில் பயின்றவர்களை சமகால கலை இலக்கிய அமைப்புகளோடும் நிறுவனங்களோடும் இணைந்து பணியாற்றவும் பயணம் செய்யவும் வழிகாட்டுதல்.
  • அனலி மாணவர்களில் தகுதியானவர்களை அனலி ஆசான்களாக இணைத்துக் கொள்ளுதல்.
  • முன்னாள் மாணவர் சங்கங்கள் உருவாக்கி வழிகாட்டு நிகழ்வுகள் நடாத்துதல்.
  • புதிய கலை இலக்கிய அமைப்புகளை உருவாக்குதல்.


பாடங்கள்

நிகழ்த்துக்கலைகள்
  • ஒயிலாட்டம்
  • கோலாட்டம்
  • கழியலாட்டம்
  • பறையாட்டம்
  • சிலம்பாட்டம்
  • மான்கொம்பாட்டம்
  • சாட்டைக்குச்சியாட்டம்
  • கரகாட்டம்
  • பொம்மலாட்டம்
  • பழங்குடியினர் நடனங்கள்
  • பேச்சாளர் பயிற்சி
  • நாடகம்
  • கதைச்சொல்லி
கவின் கலைகள்
  • ஓவியம்
  • சிற்பம்
  • வடிவமைப்பு
இலக்கியம்
  • கவிதை
  • கட்டுரை
  • சிறுகதை
  • நாடகம்
  • புதினம்
  • விமரிசனம்
  • தர்க்கம்
  • தத்துவம்
ஊடகவியல்
  • இதழியல்
  • நாடகம்
  • நடிப்பு
  • புகைப்படம்
  • திரைக்கதை
  • ஆவணத் திரைப்படம்
  • குறுந்திரைப்படம்
  • படத்தொகுப்பு
கல்வியியல்
  • தமிழிலக்கணம்
  • சிறுவர் உளவியல்
  • உளவியல் ஆற்றுப்படுத்துகை
  • கலைவழி உளவியல் ஆற்றுகை
  • விளையாட்டாய் கற்பிப்போம்
  • பேரிடர்க் கல்வி
  • ஊடகக் கல்வி
ஆய்வியல்
  • மக்களாய்வியல்
  • ஆய்வு முறைமைகள்
  • ஆய்வரங்கங்கள் அறிமுகம்
  • ஆய்வுக் கட்டுரைகள் எழுதுதல்
  • பதிப்பித்தல்
மேலாண்மையியல்
  • நிகழ்ச்சி மேலாண்மை
  • பேரிடர் மேலாண்மை
  • ஊடக மேலாண்மை
  • சமூகத்தலைமைத்துவம்







"நாற்காலிக்காரர்" நாடக ஆற்றுகை - நடிகர்கள் தேர்வு

தமிழின் மிக முக்கிய நாடக ஆளுமையான கூத்துபட்டறை ந.முத்துசாமி அவர்களின் நினைவாக நாற்காலிக்காரர் நாடக ஆற்றுகை நிகழ்த்த அனலி விழைகிறது. அதன் நிமித்தமாக நடிகர்கள் தேர்வு நடைபெறுகிறது. விருப்பம் இருந்தும் குறிப்பிட்டிருக்கும் நாளில் வர இயலாதவர்கள் தொலைபேசியில் தெரிவித்தால் தகுந்தாற்போல்  மாற்று நாளில் தாங்கள் பேட்டி காணப்படுவீர்கள். வயது தடையில்லை.


அனலி கலை இலக்கியப்பள்ளி அலுவலக அறிமுக விழா